ராஜபக்சக்களை விரட்டியடிப்போம் – விமல் சூளுரை.

“பழைய பாதையில் பயணிப்பதற்கே ராஜபக்சக்கள் முயற்சிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். நாட்டு மக்கள் இதற்கு இடமளிக்கமாட்டார்கள். ராஜபக்சக்களை நிச்சம் விரட்டுவோம்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடாது, இழுத்தடிப்புச் செய்து, பழைய பாதையில் பயணிப்பதற்கு ராஜபக்சக்கள் முயற்சிக்கின்றனர். எம்.பிக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள சதி செய்கின்றனர். அவ்வாறு உருவாகும் ஆட்சியை மக்கள் விரட்டியடிப்பார்கள்.
இந்த விடயத்தில் அவர்கள் உறுதியாகவே உள்ளனர். நாமும் எமது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” – என்றார்.