பேச்சுவார்த்தையே தேவையில்லை, ராஜினாமா செய்து வெளியேறுங்கள் – பிரதமருக்கு போராட்டக்காரர்கள் பதில்
காலிமுகத்திடலில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமருடனோ அல்லது அரசாங்கத்தில் உள்ள எவருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
உடன் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கத் தயார் என பிரதமர் அறிவித்ததற்கு போராட்டக்காரர்களின் எதிர்வினை என்ன என்பதை அறிய இன்று (13) பிற்பகல் காலிமுகத்திடல் மைதானத்தில் பல்வேறு பிரிவுகளின் போராட்டத்தை ஏற்பாடு செய்துவரும் ஆர்வலர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் இது தொடர்பாக பிரதமரிடம் தெளிவான எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்குவோம் என்றார்கள். நாடு இவ்வளவு மோசமான படுகுழியில் வீழ்ந்த பின்னர், ராஜபக்சக்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் நாடு முழுவதும் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்சே அரசு பதவி விலகும் வரை இந்த மக்கள் போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
புதுவருடமான இத்தருணத்தில், ஒவ்வொரு பெற்றோல் நிலையத்திலிருந்தும் கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், வரலாற்றில் சிங்கள – தமிழ் புத்தாண்டில் மக்கள் அடுப்புகளை பற்றவைக்க முடியாது பட்டினி கிடக்கும் ஒரு தருணத்தை இதுவரை மக்கள் அனுபவித்ததில்லை என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்துவதாகவும் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
“முதலில் ராஜினாமா செய்யுங்கள். அதுதான் தற்போது உங்களுக்குச் சொல்லப்படும் செய்தி” என்று போராட்டக்காரர்கள் முடித்தனர்.
காலிமுகத்திடல் போராட்டம் இப்போது முழு உலகத்தின் பர்வையின் முக்கிய புள்ளியாக மாறியுள்ளமை விசேசமான ஒரு விடயமாகும்.