உர மானியம் தொடர்பில் மஹிந்தவிடம் தொடுக்கப்பட்ட கேள்விக்கணைகள்.
உர மானியம் தொடர்பில் நாமல் கருணாரத்ன, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் தொடர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை விவசாய சம்மேளன அழைப்பாளர் நாமல் கருணாரத்ன, இதுவரையில் உரம் இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது ஓடர் செய்யப்பட்டதா என்பது குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும்.
“இப்போது, அரசாங்கம் உர மானியம் கொடுக்கத் தொடங்கினால், அது எப்போது தொடங்கும்? இப்போது உரம் கொண்டு வந்தீர்களா? இப்போது உரம் ஓடர் செய்தாலும் இலங்கைக்கு உரம் கொண்டு வர குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும்.
தற்போது விவசாயிகளுக்கு ஏலப் பருவம் தொடங்குவதற்குள் வேலையைத் தொடங்க வேண்டும். வயலில் இறங்க நினைக்கும் விவசாயிகளுக்கு உரம் எப்போது வழங்கப்படும்? எப்படி கொடுப்பது? மானியமா இலவசமா? அல்லது விவசாயி ஒரு மூடை உரத்தை ரூ.1,500க்கு வாங்கியிருக்கலாம். 1500 ரூபாய் கொடுக்கிறீர்களா? எனவே எவ்வளவு செலவாகும்? நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்கள்? என்ன திட்டங்கள் உள்ளன? இது முன்வைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.