ஆஸ்திரேலியாவில் முதல்தடவையாக புதியவகை XE கோவிட் தொற்று.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல்தடவையாக புதிய XE வகை கொரோனா நோய்த்தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவரிடமே இந்நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. XE குறித்த மேலதிக விவரங்களை இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
விக்டோரிய சுகாதார அதிகாரிகள் கழிவு நீர் மாதிரிகளில் Omicron வைரஸின் புதிய துணைத் திரிபைக் கண்டறிந்துள்ளனர். Tullamarine பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் BA.4 அல்லது BA.5 துணைத்திரிபு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், டென்மார்க், UK மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த துணைத்திரிபு சமீபத்தில் குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்டது.
தெற்கு ஆஸ்திரேலியா ஏப்ரல் 15 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் முகக்கவச கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
எனினும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள், முதியோர் பராமரிப்பு மையங்கள், சிறைச்சாலைகள், சீர்திருத்த மையங்கள் அல்லது பயிற்சி மையங்கள் மற்றும் பொது அல்லது தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
அதுமட்டுமல்லாமல் சுகாதார சேவைகள், மருந்தகங்கள், pathology மையங்கள், பயணிகள் போக்குவரத்து சேவைகள் (டாக்சிகள், ரைட்ஷேர் மற்றும் பிற வாடகை அல்லது வாடகை வாகன ஏற்பாடுகள் உட்பட) விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.