கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட்டுக்கு பிணை ……

நேற்று காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டின் விடுதலையை சட்டத்தரணிகள் குழுவொன்று உறுதி செய்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் , அவரது அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக பொலிஸ் அதிகாரி ஊழலை ஒழிக்க ஏனைய போலீசாரும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பேசினார்.

பின்னர் அவர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியதற்கு , ஆதரவாக தமது சேவைகளை இலவசமாக வழங்கும் 12 சட்டத்தரணிகள் குழுவினர் அவர் சார்பாக இறங்கினர்.

தொடர்ந்தும் பொதுப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டுள்ள பல நபர்களுக்காக இந்த சட்டத்தரணிகள் இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தி தமது சேவைகளை வழங்கி வருகின்றனர்.

பொலிஸ் சார்ஜென்ட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், “ஒருவரின் கருத்தைக் கூறுவது குற்றமல்ல என்றும் , அது ஒரு நபரின் அடிப்படை உரிமை” என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தோம் என்றார்.

தற்போதைய நெருக்கடியை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இவ்விடயம் தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பது குற்றமல்ல எனவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.