உக்ரைன் தலைநகரில் நுற்றுக்கணக்கிலான மக்களின் சடலங்கள் கண்டெடுப்பு…

உக்ரைன் தலைநகர் கீவ்வில் நுற்றுக்கணக்கிலான பொது மக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி ,உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2-வது மாதத்தை நெருங்கியது. ரஷ்யப் படைகளின் துப்பாக்கி மற்றும் ஸ்னைப்பர் தாக்குதலில் பொது மக்கள் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ,ரஷ்யப் படைகள் பின்வாங்கிய இடங்களில் நடைபெறும் சீரமைப்பு பணியில் 900 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சடலங்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட சடலங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.