மாற்று இல்லை! அரசை எதிர்க்கும் கட்சிகள் காலிமுகத் திடலை நோக்கித் திரும்ப தீர்மானம்!

அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக அரசாங்கத்தில் இருந்து விலகிய கட்சிகள் உள்ளிட்ட குழு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பங்கு கட்சிகளின் முன்மொழிவை அரசாங்கம் நிராகரித்ததன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தமது குழுவின் கருத்துக்களுக்கு அரசாங்கம் கட்டுப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிய மக்களுக்கு ஆதரவளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதற்கான அறிவிப்பை தயாரித்து வெளியிட, இந்த வாரம் கூட்டம் நடத்தப்படும் என்றார்.