பதவி விலகமாட்டேன்! – கோட்டா திட்டவட்டம்

“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவிக் காலம் முடிவடையும் வரை நான் பதவியில் இருப்பேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும், எதிர்க்கட்சியினர் முன்வராதமையினாலேயே, புதிய அமைச்சரவையை நியமிக்கத் தீர்மானித்துள்ளேன்” – என்றார்.