பாடசாலைகளின் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிப்பது இடைநிறுத்தம்.

தமிழ், சிங்கள பாடசாலைகள் நாளை ஆரம்பம்

முஸ்லிம் பாடசாலைகள் மே 04 ஆரம்பம்

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்கும் தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகள், புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் நாளை (18) மீண்டும் 2022ஆம் ஆண்டிற்கான 1ஆம் வணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், புனித ரமழான் நோன்புக்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் மே 04ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொவிட்-19 காரணமாக, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த நேரத்தை ஈடுசெய்யும் வகையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு நீடிப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானத்தை நீக்குமாறு பல்வேறு ஆசிரிய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அத்தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, பாடசாலைகள் வழமை போன்று மு.ப. 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே 23 முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதால், மே மாதம் மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான பாடசாலை நாட்கள்/ விடுமுறை – 2021/2022

தமிழ், சிங்கள் புதுவருட விடுமுறை
ஏப்ரல் 08, 2022 – ஏப்ரல் 17, 2022

1ஆம் தவணை – 1ஆம் கட்டம்
ஏப்ரல் 18, 2022 – ஏப்ரல் 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 – ஜூன் 05, 2022

1ஆம் தவணை – 2ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 – ஜூலை 08, 2022

2ஆம் தவணை
ஜூலை 18, 2022 – செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை – 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 – ஒக்டோபர் 13, 2022

2022 க.பொ.த. உ/த பரீட்சை விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 – நவம்பர் 13, 2022

3ஆம் தவணை – 2ஆம் கட்டம்
நவம்பர் 14, 2022 – டிசம்பர் 23, 2022

முஸ்லிம் பாடசாலைகள் பாடசாலை நாட்கள்/விடுமுறை – 2021/2022
1ஆம் தவணை – 1ஆம் கட்டம்
மே 04, 2022 – மே 20, 2022

2021 க.பொ.த. சா/த பரீட்சை விடுமுறை
மே 21, 2022 – ஜூன் 05, 2022

1ஆம் தவணை – 1ஆம் கட்டம்
ஜூன் 06, 2022 – ஜூலை 07, 2022

2ஆம் தவணை
ஜூலை 07, 2022 – செப்டெம்பர் 16, 2022

3ஆம் தவணை – 1ஆம் கட்டம்
செப்டெம்பர் 19, 2022 – ஒக்டோபர் 13, 2022

விடுமுறை
ஒக்டோபர் 14, 2022 – ஒக்டோபர் 26, 2022

3ஆம் தவணை – 2ஆம் கட்டம்
ஒக்டோபர் 27, 2022 – டிசம்பர் 23, 2022

Leave A Reply

Your email address will not be published.