மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலக தயார் ? நாமல் பிரதமராகிறார்?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை விட்டு விலக தயாராக இருப்பதாக இணைய தகவல்கள் வழி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உத்வேகத்துடன் கூடிய பொது மக்கள் எதிர்ப்பு மற்றும் பாராளுமன்றத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு அப்பதவியை இளைஞர் ஒருவருக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகினால், பிரதமர் பதவி நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படலாம் என தெரியவருகிறது. ரமேஷ் பதிரண மற்றும் டலஸ் அலஹப்பெரும ஆகிய முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும், அப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருங்கிய தகவலின்படி தற்போதுள்ள நிலையின்படி கண்டிப்பாக பிரதமர் பதவியை கைவிட அவர் தயாராக இருப்பதாக தெரிகிறது.
இதற்கு முன் கடந்த ஏப்ரல் 03ம் திகதியே அவர் பதவி விலக முயன்ற போதும் , முன்னாள் அமைச்சர்களான பிரசண்ண ரனதுங்க மற்றும் ஜான்ஸ்டன் ஆகியோரது வற்புறுத்தலின் பேரில் அவர் தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.