கோட்டாகோகம ஆர்ப்பாட்ட களத்தில் தமிழில் ஒலித்த இலங்கை தேசிய கீதம் (Videos)
ராஜபக்ச தரப்புக்கு எதிராக காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்ட பூமியில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.
தமிழிலும் சிங்களத்திலும் இலங்கையில் பாடப்பட்டு வந்த இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் எனும் குரல்கள் எழுந்தன. ஆனால் அது முழுமையாக பின்பற்றப்படாது , தமிழ் பகுதிகளில் தமிழிலேயே பாடப்பட்டது.
2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் தேசிய கீதம் பாடப்பட்ட போதிலும் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் 2020 இல் அந்த நடைமுறையை நிறுத்தியது.
அந்த முறையை மீறி இன்று (17) கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று மாலை தமிழ் மொழியில் மிகவும் உணர்வுபூர்வமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், போராட்டக் களத்தில் நேற்று சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இலங்கையின் தேசிய கீதம் பாடும் காட்சி