காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் கம்பவாரிதி குழுவினர் பங்கேற்பு (photo)

காலிமுகத்திடலில் கோட்டாபய அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்துக்கு கம்பன் கழகத்தின் நிறுவுநர் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டக் களத்துக்கு இன்று அவர்கள் நேரடியாகச் சென்று அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.
இந்து மக்கள் சார்பாகக் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்டோம் என்று கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்தார்.