தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு செய்யாததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு செய்யாததை கண்டித்து தூத்தூர் மண்டல மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் உருவாக்கப்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் துறைமுக முகத்துவாரப் பகுதி கட்டமைப்பு சரிவர அமைக்காததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு 26 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய கேட்டு மீனவர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இதுவரையிலும் துறைமுக முகத்துவாரப் பகுதி மறுசீரமைப்பு செய்யும் பணி துவங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரப்படுகிறது.

இதனால் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்படும் கடல்சீற்றத்தில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் குறைபாடுகளை சீரமைக்க கேட்டு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக முக துவாரத்தில் கடலடி காலங்களில் ஏற்படும் மண்திட்டு காரணமாக கடந்த காலங்களில் 26 மீனவர்கள் படகு கவிழ்ந்து உயிர் இழந்தனர். இதை தொடர்ந்து மீனவர் பல கட்ட போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து வல்லுனர் குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறு கட்டமைப்பு செய்ய ஆய்வு செய்து வரைபடங்கள் தயார் செய்தனர்.

ஆனால் இதுவரை பணிகள் செய்யாததை கண்டித்து வரும் ஏப்ரல் , மே காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் காலம் என்பதால் உடனே பணிகள் துவங்க வலியுறுத்தி தூத்தூர் , இனயம் மண்டலத்தை சேர்ந்த நீரோடி முதல் மிடாலம் வரை உள்ள 15 மீனவ கிராமங்களை சேர்ந்த ஐம்பதாயிரம் மக்கள் துறைமுக பயனாளர்கள் தங்களது 2500 விசைப்படகுகள் மற்றும் ஆறாயிரம் நாட்டு படகுகளை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் உடனே பணிகள் துவங்கா விட்டால் வரும் காலங்களில் பெரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் கறுப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.