758 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை

இந்தியாவில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை மல்டி லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என்ற பெயரில் சட்டவிரோத முதலீடு மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியத்துடன், நிறுவனத்திற்கு சொந்தமான 36 வாங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் ஆம்வேயின் நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், ஆலை ஆகியவை அடங்கும் என்று விசாரணை நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சொத்துக்களின் மதிப்பு 411.83 கோடி ரூபாய் எனவும், வங்கியில் உள்ள இருப்புகள் 345.94 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.