பிரியந்த படுகொலை: 6 பேருக்கு மரணதண்டனை.

பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார அடித்துப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் லாகூரிலுள்ள நீதிமன்றம், மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்,
76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.