திருகோணமலை – கண்டி பிரதான வீதியிலும் தடை.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேரூந்து ஒன்றினை வீதிக்கு குறுக்கே நிறுத்தி உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதே வேளை பாடசாலைக்கும் மாணவர்கள் செல்லவில்லை என பாடசாலை வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்தது.
மேலும் காலை, தொழில் நிமித்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.