ரம்புக்கனை வெறியாட்டம்: பிரதமர் மஹிந்த கவலை! விசேட விசாரணைக்கும் உத்தரவு.

ரம்புக்கனையில் நேற்று போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

ருவிட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.