புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் மீண்டும் வெளியீடு.

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். இவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அந்த படத்தில் புனித் ராஜ்குமாருக்கு அவரது சகோதரர் சிவராஜ்குமார் டப்பிங் பேசினார். ஆனால் தற்போது புனித் ராஜ்குமார் குரலிலேயே உரையாடல்களை சேர்த்து ஜேம்ஸ் திரைப்படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி மைசூருவில் நடிகர் சிவராஜ்குமார் கூறுகையில், ‘இதுபோன்ற ஒரு தொழில்நுட்பம் இருப்பது எனக்கு முன்பே தெரியாது. படப்பிடிப்பின்போது புனித் ராஜ்குமார் நேரடியாக பேசியதை அப்படியே படம்பிடித்து வைத்துள்ளனர். அதை தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைத்து படத்தில் இணைத்துள்ளனர். நாம் மீண்டும் புனித் ராஜ்குமாரின் குரலை கேட்க இருக்கிறோம்’ என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.