உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (21.04.2022)

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் ஒரு துக்கம் நிறைந்த நாளாகவே அமைந்துவிட்டது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கொண்டாடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர்.
400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
அத்துடன், 40 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 45 சிறார்களும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் கடந்து விட்டன.
இந்த துயரசம்பவத்தில் தங்கள் இன்னுயிர்களை பலிகொடுத்தவர்களின் ஆத்மாக்கள் இறை சந்நிதியில் இளைப்பாறவும் உறவுகளை இழந்தவர்கள் ஆற்றுகை பெறவும் விசேடமாக இன்றைய தினத்தில் பிரார்த்திப்போமாக ….