வங்கதேச முன்னாள் வீரர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.
வங்கதேச அணியின் முன்னாள் வீரர் மொஷரஃப் ஹுசைன், மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மொஷரஃப் ஹுசைன் வங்கதேச அணிக்காக 2008ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக 2016ஆம் ஆண்டு விளையாடினார். அவர் தேசிய அணிக்காக 5 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார். இடக்கைச் சுழற்பந்துவீச்சாளரான மொஷரஃப் ஹுசைன், 2008ஆம் ஆண்டில் விளையாடிய பிறகு 8 ஆண்டுகள் கழித்து வங்கதேச அணியில் மீண்டும் இடம்பெற்றார்.
வேறு எந்த வங்கதேச வீரரும் இத்தனை நாள் இடைவெளியில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்றதில்லை.
இந்த நிலையில், அவர் கடந்த 2019ஆம் ஆண்டு மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் நவம்பர் 2020ஆம் ஆண்டில் மீண்டும் மூளைப் புற்றுநோயால் மீண்டும் பாதிப்புக்கு ஆளானார்.
இதையடுத்து தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மொஷரஃப் ஹுசைனின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.