மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் – பிரதமர் அலுவலகம் விசேட அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான தீர்மானம் இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (21) முற்பகல் 11.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது மற்றும் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பிந்திய செய்தி
மஹிந்த தலைமையில் அரசு! – ஆளும் கட்சிக் கூட்டத்தில் பிரேரணை நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது எனப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அரசு வலுவாக முகம்கொடுக்க வேண்டும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசு அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் யோசனையொன்றை முன்மொழிந்தார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி அந்த யோசனைக்கு ஏகமனதாக ஆதரவளித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் அதனை வழிமொழிந்தார் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.