ரிலீசுக்கு தயாராகும் கமலின் விக்ரம்.
நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன்களை படக்குழு தற்போது துவக்கியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் பிரமோஷன் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
நடிகர் கமல் தேர்தல், பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பு உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காலங்களாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் கமலின் தீவிர ரசிகராக இருப்பது கூடுதல் சிறப்பு.
படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூட்டிங் நிறைவடைந்து படம் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.
படத்தில் ரிடையர்ட் போலீஸ் அதிகாரியாக கமலும் அவரது மகனாக காளிதாஸ் ஜெயராமும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து விஜய்க்கு டஃப் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் வில்லனாகவே மிரட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட நாட்கள் உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை தற்போதே விக்ரம் படக்குழு துவங்கியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ரயில்களில் படத்தில் கமலின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஈரோடு லோகோ ரயில்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கமல் என்றாலே சிறப்பான திரைக்கதை, காட்சி அமைப்புகள் உள்ளிட்டவை கூடவே வந்துவிடும். இந்நிலையில் படத்தின் பிரமோஷன் தற்போது முதலே அதிலும் ரயில்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. வட மாநிலங்களிலேயே இந்த பிரமோஷன் என்றால் தமிழகத்தில் எந்த மாதிரியான பிரமோஷன்களை படக்குழு மேற்கொள்ளும் என்பதை அறிய ரசிகர்கள் தற்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.