அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை…

தனியார் வைத்தியசாலைகளில் 76 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி தனியார் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறை குறித்து தனியார் சுகாதார ஒழுங்குபடுத்தல் சபைக்கு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களின் கூட்டமைப்பு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.
மேலும் குறித்த மருந்து பொருட்களை விரைவில் தனியார் மருத்துவமனைகளுக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளன.