‘உடலில் எங்கு தொட்டாலும் வலி ‘.. வினோத நோயால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி – உதவிக்காக தவிப்பு

உடலில் எங்கு தொட்டாலும் வலி ஏற்படுகின்ற வினோத நோயால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக 35 லட்சம் ரூபாய் உதவிக்கரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வறுமையோடும், வலியோடும் தவித்து வருகின்றார்.
தமிழக கேரள எல்லை நெய்யாற்றின்கரை சாய்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 49). இவருக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளாக உடலில் எங்கு தொட்டாலும் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளது. இதனால் படுக்கையிலேயே தவித்து வருகிறார். இவரது மனைவி சுரண்யா வீட்டில் இருந்து இவரையே கவனித்து வருகிறார். இவரது மகன் ஆதித்யா சுனில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இந்த நோய்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு எர்ணாகுளம் அம்ரிதா மருத்துவனையில் மட்டுமே செய்ய முடியும் என கூறியுள்ளனர். இவருக்கு லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்காக முப்பத்தைந்து லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏ பாசிட்டிவ் ரத்தவகை கொண்ட லிவர் தானம் பெற வேண்டியும் உள்ளது. இவரது தாய் தந்தைக்கும் இதே போல் நோய் இருந்ததால் அதற்கான சிகிச்சைக்காகவும் , தங்கையை திருமணம் செய்து கொடுத்தும் கடனில் இருந்த இவருக்கு ஏற்கனவே இவர் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வருவதால் தினம் தோறும் குடும்ப செலவுக்கே பணம் இன்றி தவித்து வருகின்றனர்.
குடும்ப செலவு சிகிச்சை செலவிற்காக உதவி கரங்களை காத்து பரிதவித்து நிற்கிறது இந்த குடும்பம். இவருக்கு கடந்த 14 தேதி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு நடைபெற்றது இந்த நிலையில் பணம் இல்லாத காரணத்தால் 27 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.