பாப்பரசரை சந்திக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 35 பேர் ரோம் பயணம்.
பரிசுத்த பிரானசிஸ் பாப்பரசரின் விசேட அழைப்பின் பேரில் கருதினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்று (22) அதிகாலை, ரோம் நகரை நோக்கி பயணித்துள்ளார்.
அவருடன், இப்பயணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்புக்குள்ளான 35 பேர் உள்ளடங்குகின்றனர்.
இதில், 18 அருட் சகோதரிகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட, மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 4 பேர், கொழும்பு கொச்சிக்கடை தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 6 பேர், நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 20 பேர் உள்ளடங்கலாக 60 பேர் இவ்வாறு பாப்பரசரை சந்திக்க செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் காரணமாக நேர்ந்த அநீதி தொடர்பில் அவர்கள் பரிசுத்த பாப்பரசருக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரிசுத்த பாப்பரசரை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் கடந்த முறையை சந்தித்தபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 35 பேரை அழைத்து வருமாறு தெரிவித்ததாக நேற்றைய (21) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தில் பேராயர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.