கொரோனா பாதிப்பு எச்சரிக்கை காரணமாக ரிக்கி பொன்டிங் தனிமைப்படுத்தப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடத்தப்படாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு படிப்படியாக கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாகவும், போதுமான அளவு சரியான முறையில் தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டதாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது சரியான திட்டமிடுதலுடன் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இத்தொடரானது தற்போது கிட்டத்தட்ட பாதி தொடரை கடந்து விட்டது என்றே கூறலாம். இந்நிலையில் இந்த தொடரிலும் கொரோனா தனது ஆட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது. அந்த வகையில் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் முதன் முதலாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டதால் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரை தொடர்ந்து அந்த அணியின் முன்னணி வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் டெல்லி அணி திட்டமிட்டபடி இந்த தொடரில் தொடர்ச்சியாக பங்கேற்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சரியான பாதுகாப்புடன் தற்போது டெல்லி அணியானது தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
ஆனால் தற்போது மேலும் டெல்லி அணிக்கு ஒரு பின்னடைவாக அந்த அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தற்போது டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் அவருடன் அவரது குடும்பத்தாரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் குடும்பத்தினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது ரிக்கி பாண்டிங் அவர்களுடன் சேர்த்து ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மைதானத்தில் முக கவசத்துடன் அமர்ந்திருந்த ரிக்கி பாண்டிங் தற்போது முன்னெச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போது ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியின் வீரர்கள் இடையே இல்லாமல் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். டெல்லி அணியில் ஏற்கனவே பல வீரர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது அந்த அணியின் வீரர்கள் இடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.