‘கோ ஹோம் கோட்டா’ போராட்டக் களத்தில் மஹிந்த தேசப்பிரிய!
காலிமுகத்திடலில் அமைந்துள்ள கோட்டாகோகம கிராமத்துக்கு இன்று வருகை தந்து போராட்டக்களத்தில் நிறைந்திருக்கின்ற இளைஞர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தார் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
அரசு பதவி விலகிச் செல்ல வேண்டும் என்ற இளைஞர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
கடந்த 9ஆம் திகதி சனிக்கிழமை காலிமுகத்திடலில் ஒன்றுகூடிய இளைஞர்களும், யுவதிகளும் தொடர்ச்சியாக இன்று 14ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக தற்போது நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்களும் கோஷங்களும் ஓங்கி வருகின்றன.
இந்நிலையில் கலைஞர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், மதத்தலைவர்கள் எனப் பல தரப்பினரும் வருகை தந்து தமது ஆதரவை வெளிப்படுத்தி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையிலேயே முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் காலிமுகத்திடலுக்கு இன்று வருகை தந்து இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.