ரம்புக்கன பவுசருக்கு தீ வைக்க முயன்ற பச்சை நிற சட்டை ஆடவர் கைதானார்!

கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ரம்புக்கன பிரதேசத்தில் பௌசருக்கு தீ வைத்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்தேகநபர் ரம்புக்கன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ரம்புக்கனைக்கு தீ வைப்பதற்காக எஸ்.எஸ்.பி கீர்த்திரத்னவுடன் சீருடை அணிந்த ஏழு பொலிஸாரும் , சீருடை அணியாத ஆறு பொலிஸாரும் பிரசன்னமாகியிருந்தமை தெரியவந்துள்ளது.