குடும்பஸ்தர் சுட்டுப் படுகொலை!

இனந்தெரியாத நபரால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை, பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபராலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் வைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.