16ஆவது நாளாக தொடரும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்!
கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (24) 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இதன்படி கடும் மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்டம் கைவிடப்படாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்றையதினம் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லங்ஷானின் இறுதிக் கிரியைகள் காலிமுகத்திடலிலும் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து வெள்ளைக் கொடிகள், மலர்வளையங்களை ஏந்தியவாறு பிரதமரின் வாசஸ்தலமான அலரிமாளிமைக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இதேவேளை, போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கிராமத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.