புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நாளை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைக்கவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.