மஹிந்தவின் இல்லம் மாணவர்களால் சுற்றிவளைப்பு! : விஜேராமவில் பதற்றம் (Video)

அரசுக்கு எதிரான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பு – விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது.
இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.