சிவகார்த்திகேயனின் டான் படத்தை பார்த்து ரசித்த தளபதி விஜய் !

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
ரெமோ, வேலைக்காரன், எதிர் நீச்சல் போன்ற வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை செம இம்ப்ரெஸ் செய்துள்ளார்.
தற்போது, டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. டான் திரைப்படம் மே 13ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்தியேன், பிரியங்கா மோகன், ஷிவாங்கி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இயக்குனரான சிபி சக்ரவர்த்தி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் இத்திரைப்படத்தை சினிமாவில் உள்ள முக்கிய நபர்களுக்கு போட்டுக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி அவர் தளபதி விஜய்க்கும் படத்தை போட்டுக்காட்டியதாகவும், படத்தை பார்த்துவிட்டு விஜய் “சூப்பரா இருக்கு டா” என சொன்னதாகவும் கூறியுள்ளார்.