மஹிந்தவுக்கு ஆதரவு கோரி கையொப்பம் பெறும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஆளுங்கட்சிக்குள் கையொப்பம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் நேற்று இரவு வரை 50 பேர் வரையான எம்.பிக்கள் மட்டும் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதேவேளை, ஆளுங்கட்சி எம்.பிக்கள் சிலர் நேற்று பிரதமர் மஹிந்தவைச் சந்திக்க முயன்றனர். எனினும், அவர் தங்காலை சென்றுவிட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த கலந்துகொள்வாரா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுவதற்கு முன்னர், அதாவது இன்று மாலைக்குள் 113 பேருக்கு மேற்பட்டோர் கையொப்பமிட்டு, பிரதமராக மஹிந்த நீடிக்க ஆதரவு என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடிதம் சமர்ப்பிக்க முயற்சி எடுக்கப்படுகின்றது.

இந்த முயற்சி சாத்தியப்படாத பட்சத்தில் அரசியலில் பரபரப்புச் சம்பவங்கள் இன்று முதல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.