சவால்களை துணிவோடு எதிர்கொண்டால் உச்சத்தை அடையலாம்: பிரதமர் மோடி

சவால்களை துணிவோடு எதிர்கொள்வோரே வாழ்க்கையிலும், விளையாட்டிலும் உச்சத்தை அடைகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்,

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேலோ இந்தியா போட்டி 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான போட்டி பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், அனைத்து பங்குதாரர்களும் நமது உள்நாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் இந்த பதிப்பில் யோகாசனம் மற்றும் மல்லகம்பா போன்ற உள்நாட்டு விளையாட்டுகளுடன் 20 விளையாட்டுபிரிவுகள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “நமது கிராமங்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு விழா டிஜிட்டல் நகரமான பெங்களுருவுக்கு புத்துணர்வைத் தரும் என்றார். விளையாட்டில் தோல்வி என்பது பாடங்களைக் கற்றுத் தருவதால் அது வெற்றியாகவே பார்க்கப்படும் என்றும், விளையாட்டோ, வாழ்க்கையோ எதுவாயினும் சவால்களை துணிவோடு எதிர்கொள்வோரே உச்சத்தை எட்டுவர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.