சஜித் தரப்பை தடுத்தோம் : இப்போது 120 உள்ளதால் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருகிறோம்! கம்மன்பில (Video)
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வர முயன்ற போது ,113 பேரின் ஆதரவு இல்லாத நிலையில் அதை கொண்டு வர வேண்டாம் என தடுத்தோம். அதனால் அரசின் மீது நம்பிக்கை இல்லாமை அல்ல , நம்பிக்கை ஏற்பட்டுவிடும் என தெரிவித்தோம்.
தற்போது அரசாங்கத்திற்கு எதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் , தற்போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியில் இருந்து விலக இன்னும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.