20 அரசியலமைப்பு பிரேரணை , சீர்திருத்தக் குழுவிடம் செல்ல முன்னர் ஜனாதிபதி கைகளில்!
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கில் , அரசாங்கம் அறிக்கையின் உள்ளடக்கங்கள் ஆழமாகப் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் சேவை செய்தமைக்காக ஜனாதிபதி அவர்களை பாராட்டியதாக தெரிவித்த அவர் , நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை நீக்குவதற்கான பிரேரணை இன்று மாலை பிரதமரினால் கெபினட் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.