கே.எல் ராகுலுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் எச்சரிக்கை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதோடு இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த மும்பை அணியானது அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலுக்கு ஐ.பி.எல் நிர்வாகம் 24 லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அதற்கு காரணம் யாதெனில் ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை மெதுவாக பந்து வீசியதற்காக ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறைப்படி கே.எல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பந்துவீச்சினை முடிக்க அதிக நேரம் எடுக்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாக தற்போது ராகுலுக்கு 24 லட்ச ரூபாயும் லக்னோ அணியில் ஆடிய வீரர்களுக்கு 6 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராகுல் இந்த தவறை இரண்டு முறை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள் மேலும் இன்னொரு முறை இதுபோன்று நடைபெற்றால் நிச்சயம் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும், அதோடு 30 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது