ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் பாப்பரசருடன் சந்திப்பு!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரை இன்று சந்தித்தனர்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு பாதிக்கப்பட்ட 60 பேரை கடந்த வாரம் வத்திக்கான் நோக்கி அழைத்துச் சென்றிருந்தார்.
இந்நிலையிலேயே பேராயர் தலைமையில் மேற்படி பாதிக்கப்பட்ட 60 பேர் பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்து அவரது ஆராதனைகளிலும் கலந்துகொண்டனர்.