கோட்டா போக வேண்டும் :கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காது – சுமந்திரன்
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றதன் பின்னர் என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கோட்டா போக வேண்டும் என்பதே மக்களின் கோசம், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதியே முழுப்பொறுப்பு என்றும், முதலில் ஜனாதிபதியே பதவி விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றதன் பின்னர், எதிர்பார்க்கப்படும் எந்த மாற்றமும் இன்றி இது மற்றுமொரு அமைச்சரவை மாற்றமாக அமையும் என சுமந்திரன் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாங்கள் இதுவரை பார்க்கவில்லை எனவும், அது தொடர்பில் எவரும் தன்னுடன் கலந்துரையாடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று தெரிவித்துள்ளார்.