மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு?

மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக அறியமுடிகின்றது.