விலை அதிகரிக்காமல் சமையல் எரிவாயு வழங்க முடியாது.

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.