கௌரவமாக வெளியேறுங்கள்! – மஹிந்தவிடம் ரத்ன தேரர் கோரிக்கை

“பதவி விலகமாட்டேன் என அடம்பிடிக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச கௌரவமாக வெளியேற வேண்டும்.”
– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
11 கட்சிகளின் கூட்டணிக்கும், சுயாதீன அணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றிரவு நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே ரத்ன தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டு நலன் கருதி, பதவி விலகும் முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.