பிரேரணைக்கு ஆதரவு; இடைக்கால அரசுக்கு இணங்கோம்! – ஜே.வி.பி. திட்டவட்டம்.
“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜே.வி.பியின் மூன்று எம்.பிக்களும் ஆதரவளிப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்த மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலகவேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை. எமது நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது .
அவர்கள் பதவி விலகிய பின்னர் குறுகில காலப்பகுதிக்கு இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அதன்பின்னர் பொதுத்தேர்தலுக்குச் செல்ல வேண்டும்” – என்றார்.