அழகு கலை கற்ற மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

கொழும்பு நகரை தலைமை மையமாக கொண்டு, இயங்கி வரும், பெண்களுக்கான அழகு கலை கல்வி கற்ற மாணவிகளுக்கான முதல் கட்ட கற்கை நெறியை பூர்த்தி செய்து கொண்டது.
இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும், கொழும்பு பழைய தபாற்கந்தோர் கேட்போர் கூடத்தில், அதன் பணிப்பாளர் என். ஹம்ஸியா, மற்றும் இயக்குநர் எச். ஏ. எம். ஆஸிப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக தெஹிவலை நகர சபை அங்கத்தவரான திருமதி முஸ்தபா ஸரீனா அவர்களும், மற்றும் அதிதிகளாக எம். ரியாஸ் பணிப்பாளர் குளோபல் எகடமி, எம். ராஸிக் இயக்குனர் கிளோபல் எகடமி ஆகியோர் கலந்து சிறப்பித்ததையும், மாணவர்களுக்கான பரிசு, சான்றிதழ் வழங்கி வைப்பதையும் இங்கு காணலாம்.
(இக்பால் அலி)