யாழ். பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்.

யாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின்போது, யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தால் நடத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், யூ.எஸ். எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதன்போது, பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், யூ.எஸ். எயிட் நிறுவன அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.