கராத்தே தற்காப்புக்கலை தரப்படுத்தல் பட்டிகள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு குரவயல் கிராமத்தில் மேற்படி கராத்தே தற்காப்பு தரப்படுத்தல் பட்டிவழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(24) இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வு AOMAI கராத்தே கழகத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரிவு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஆதரவுடன் குரவயல் போதுநோக்கு மண்டபத்தில் மாணவர்களின் கராத்தே ஆசிரியர் ரஸ்ற்ரஸ் சென்செய் அவர்களின் ஒழுங்குபடுத்தடுடன் நடைபெற்றது.
இப் பயிற்சியில் குரவயல் தமிழ் வித்தியாலய பாடசாலையின் பெருமளவான மாணவர்கள் கராத்தே பயிற்சியினை தொடர்ச்சியாக பெறுவதுடன், கிராமத்தின் இரண்டு குடும்ப தலைவிகள் பயிற்சி பெற்று பட்டியை பெற்று கராத்தே கலையை தொடர்ச்சியாக பயின்று வருகின்றனர்.
இம் மாணவர்களுக்கான பயிற்சியினை கராத்தே ஆசிரியர் ரஸ்ற்ரஸ் சென்செய் (5வது கறுப்புபட்டி) வழங்கி வருகிறார்.
இவ் தரப்படுத்தல் பட்டிவழங்களை AOMAI சொட்டோக்கான் கராத்தே கழகத்தின் தலைமை ஆசிரியர் வட மாகாண கராத்தே சங்க தலைவர் றேமன் சென்செய் (8வது கறுப்புபட்டி) இக் கிராமத்திற்க்கு வருகைதந்து மாணவர்களை தரப்படுத்தி அவர்களுக்கான பட்டிகளை வழங்கி வைத்தார்.