பதவி விலகுமாறு கோட்டா என்னிடம் கூறமாட்டார் ! – மஹிந்த நம்பிக்கை.

“என்னைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு அவர் என்னிடம் கூறவும் மாட்டார் என்று நம்புகின்றேன்.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று அலரி மாளிகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகர சபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றேனும் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.
இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.