டீலா? யார்? வாசுவின் தலையை பரிசோதிக்க சொல்லுங்க : மனோ (Video)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் டீல் ஒன்று இருப்பதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்து குறித்து ஊடகவியளாளர்கள் கேட்ட போது மனோ கணேசன் அதை மறுத்து ஆவேசமாக பதிலளித்தார்.
வாசுதேவாவை மருத்துவரிடம் அழைத்து சென்று தலையை பரிசோதனை செய்ய சொல்லுங்கள் என்றார்.
சஜித் பிரேமதாச சரியான முடிவை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்காமல் அரசாங்கத்தை அமைப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வராது சஜித் இழுத்தடிக்கிறாரே என ஒரு ஊடகவியளாளர் கேட்ட போது , பாதயாத்திரை முடிந்த பின் என்ன நடக்கிறது என பாருங்கள். ஒன்றல்ல 2 நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வருவோம். ஒன்று ஜனாதிபதிக்கும் , இன்னொன்று மகிந்தவுக்கும் எதிராகவும் கொண்டு வர உள்ளோம். அரசை பாதுகாக்கும் விதத்தில் நம்பிக்கையில்லா பிரேணை ஒன்றை கொண்டு வரப் போவதில்லை.
யாரெல்லாம் உங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என ஒருவர் வினவிய போது , அதை பொறுத்திருந்து பாருங்கள். யார் அவர்களது பக்கம் , யார் மக்களின் பக்கம் என மக்கள் உணரும் நிலை உருவாகும். எங்கள் தோள்களில் கொண்டு வந்த சஜித் , எம்மோடு பேசித்தான் முடிவுகளை எடுக்கிறார். அவரோடு நாங்கள் இருக்கிறோம். வாசுதேவ , காமடி பண்ணுகிறார். அவர் அவரது இடதுசாரி கொள்கைகளை காட்டிக் கொடுத்தார். இப்போது அவரோடு உள்ளோரையும் காட்டிக் கொடுக்கிறார். எங்களது டீல் மக்களோடு, இவர்களோடு அல்ல. யார் , யாரோடு இருக்கிறார்கள் என்பதை பாதையாத்திரை முடிந்த பின், பாராளுமன்றம் தொடங்கும் போது பார்ப்பீர்கள் என்றார் , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன்.