ஆர்ப்பாட்டக்காரர்களை சுட உத்தரவிட்ட எஸ்.எஸ்.பி. கீர்த்திரத்ன கைது
ரம்புக்கனையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு கட்டளை பிறப்பித்த SSP , K.B. கீர்த்திரத்ன இன்று (28) இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 வயது மாணவர் உட்பட மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதுடன், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் வைத்தியசாலையில் வைத்தே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய மூவர் கண்டி குண்டசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.